×

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 170 வார்டுகளில் 827 பேர் போட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 170 வார்டுகளில் 827 பேர் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் போட்டியிட 379 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 20 மனுக்கள் நிரகரிக்கப்பட்டது. 85 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது 274 பேர் களத்தில் உள்ளனர். இதேபோல், கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிட 264 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், 13 மனுக்கள் நிரகரிக்கப்பட்டது. 81 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இறுதியாக 170 பேர் களத்தில் உள்ளனர். பர்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட 95 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 32 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் தற்போது 57 பேர் களத்தில் உள்ளனர்.

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில், 18 வார்டுகளில் போட்டியிட 105 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 5 மனுக்கள் நிரகாரிக்கப்பட்டது. 26 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. 18வது வார்டில் திமுக வேட்பாளரான பேரூர் திமுக செயலாளர் சீனிவாசனை தவிர்த்து அனைவரும் வாபஸ் பெற்ற நிலையில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதம் உள்ள 17 வார்டுகளில் 72 பேர் களத்தில் உள்ளனர். காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட 95 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 37 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. இறுதியாக 50 பேர் களத்தில் உள்ளனர். கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 78 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 11 மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், இறுதியாக 64 பேர் களத்தில் உள்ளனர்.

இதே போல், நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 18 பேர் வாபஸ் பெற்ற நிலையில், இறுதியாக 53 பேர் களத்தில் உள்ளனர். ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிட 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் எந்த மனுவும் நிராகரிக்கப்படாத நிலையில், 5 மனுக்கள் மட்டும் வாபஸ் பெறப்பட்டது. 87 பேர் தற்போது களத்தில் உள்ளனர். அதன்படி, மாவட்டத்தில் உள்ள 171 வார்டுகளில், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 18வது வார்டில் மனு தாக்கல் செய்திருந்த திமுக வேட்பாளரான சீனிவாசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 170 வார்டுகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இறுதியாக 827 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Tags :
× RELATED பைக் மீது கார் மோதி மெக்கானிக் பலி